Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை வழிபாட்டு முறை

கார்த்திகை தீபம் இதை மட்டும் செய்துவிடாதீர்கள் …!!

கார்த்திகை தீபத்தின் இந்த தவறுகளை பண்ணாமல் இருப்பது பெரும் புண்ணியத்தை தேடித்தரும்.

கார்த்திகை தீபத்தன்று நாம் மறந்தும் செய்யக்கூடாத ஒரு சில செயல்கள் பற்றி தான் நாம் பார்க்கப் போகின்றோம். இந்த கார்த்திகை நாளில் நாம் வீடு முழுவதும் கார்த்திகை தீபங்களை ஏற்றி வைப்பதனால் இருள் அகன்று ஒளி பிறக்கும். அதேபோல் நாம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி ஒளி மயமான , சந்தோசமான , நிறைவான வாழ்வை நாம் பெறுவோம். அதற்காகத்தான் இந்த கார்த்திகை தீபத்தை வீடுகளில் நாம் கொண்டாடுகின்றோம்.

இந்த கார்த்திகை தீபத்தன்று நாம் என்னவெல்லாம் செய்யக்கூடாது.

முதல்ல கார்த்திகை தீபத்தின் போது நாம் விரதமிருந்து முருகப் பெருமானையும் , சிவபெருமானை வழிபடுவது கூடுதல் சிறப்பானது. கார்த்திகை என்று சொல்லும்போதே முதலில் ஞாபகத்திற்கு வருவது முருகப்பெருமான் தான். இந்த முருகப் பெருமான் நமக்கு அனைத்து வரங்களையும் வழங்குவார். இந்த கார்த்திகை தீபத்தில் முறையாக வழிபாடு செய்யும் பொழுது அனைத்து விதமான நன்மைகளும் நமக்கு நடக்கும்.

தீபத்தை ஏற்றும் முறை:

பெண்கள் எப்போதுமே ஒரு வீட்டில் மங்களகரமான இருக்கிறார்கள் என்றால் அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் ஆனது நிறைந்திருக்கும்.மங்களகரம் அப்படினு சொல்லும் போது கையில வளையல் அணிந்து இருக்க வேண்டும். நெற்றியில் திலகமிட்டு இருக்க வேண்டும். தலைவாரி , பூச்சூடி , ரொம்ப மங்கள கிரகமாக ,  அவர்களைப் பார்க்கும்போதே ஒரு லட்சுமி கடாட்சம் இருக்கும். அப்படி தான் நாம் விளக்குகளை ஏற்ற வேண்டும்.

முக்கால் வாசி பெண்கள் வீட்டில் அணியக்கூடிய உடை என்னவென்று பார்த்தீங்கன்னா நைட்டிதான் போடுறாங்க. இந்த கார்த்திகை தீபத்தன்று பாரம்பரிய உடைகளை அணிந்து நீங்கள் தீபங்களை ஏற்றுங்கள். எப்படி ஒரு கோயிலுக்கு ரொம்ப பக்தியோட போய் விளக்கு ஏற்றுவோமோ அதேபோலத்தான் இந்த கார்த்திகை தீபங்களில் நம்ம வீட்டுலயும் விளக்கு ஏற்ற வேண்டும். அப்படி ஏற்றும் போது நம் வீடும் கோயிலாக மாறும். அப்படி கோயிலாக ஜொலிக்க கூடிய இடத்தில் கண்டிப்பாக தெய்வங்கள் அனைவருமே வாசம் செய்வார்கள்.

கோவில் சென்று வேறு உடைகளை அணிந்து தீபம் ஏற்றும் பொழுது , நமக்கே ஒரு குற்ற உணர்வு இருக்கும். அதே போல்தான் வீடுகளிலும் இந்த கார்த்திகை தீபத்தை ஏற்றும்போது இதை ஒரு பண்டிகையாக கொண்டாடுங்கள். பண்டிகை நாட்களை எப்படி ஒரு பாரம்பரிய உடைகளை அணிந்து தீபமேற்ற்றுவீர்களோ அதேபோல பாரம்பரிய உடைகளை அணிந்து நீங்கள் தீபம் ஏற்றுங்கள். விளக்கு ஏற்றும் போது கைகளில் கண்டிப்பாக வளையல் , நெற்றியில் திலகம் , தலைவாரி , பூச்சூடி நல்ல பாரம்பரிய உடை அணிந்து விளக்கு ஏற்றுங்கள்.

எதில் விளக்கை ஏற்ற வேண்டும்:

அன்னைக்கு வீட்டை சுத்தம் செய்யுறது , அன்னைக்கு விளக்கை கழுவுவது போன்ற வேலைகளைச் செய்யக் கூடாது. விளக்கேற்றும்போது பூஜையறையில் எப்படி ஏற்றுவோமோ அதே போல விளக்குக்கு கீழ தட்டு வைத்து அதுல தான் விளக்கு ஏற்றுவோம். அதே போல கார்த்திகை தீபத்தன்று நிறைய விளக்குகள் ஏற்றுவோம்.அதனால் நிறைய விளக்குகள் என்றாலும் கூட ஒவ்வொரு விளக்கிற்கும் கீழேயும் நீங்கள் தட்டு வைக்க வேண்டும். அப்படி தட்டு வைக்க முடியாதவர்கள் அந்த காலத்தில் நம் முன்னோர்கள் என்ன வைப்பாங்க பாத்தீங்களா பசும் சாணம். லட்சுமி வாசம் செய்யக் கூடிய இடம். அத கொஞ்சம் வைத்து அதற்கு மேல அகல் விளக்கை வைத்து ஏற்றுவார்கள். இப்போ பசு சாணம் கிடைக்கிறது கிடையாது. அதனால என்ன பண்ணிக்கலாம் என்றால் வாழை இலையையே நீங்க வச்சுக்கலாம். அல்லது வெற்றிலை , அரச இலை இது போன்ற இலைகளை வைத்து அதற்கு மேல நீங்க அகல் தீபத்தை வைப்பது தான் சரியான முறை.

எப்படி ஏற்ற வேண்டும் :

அகல் விளக்குகளை நாம் அங்கங்க கொண்டு போய் வைத்து விடுவோம். அந்த மாதிரி வைக்கக்கூடாது. எத்தனை விளக்குகள் இருந்தாலும் சரி அதற்கு கீழே ஒரு சிறு வாழை இலையோ , வெற்றிலையோ , ஆழ இலையோ , அரச இலையோ வைத்து தீபம் ஏற்றலாம். தலைவாசலில் தான் லட்சுமி தேவி வாசம் செய்கிறார்கள். குலதெய்வம் வாசம் செய்கிறது. எனவே அந்த தலை வாசலை திறந்து வைத்து விட்டு தான் நாம் தீபமேற்ற வேண்டும்.

இப்ப எல்லாருமே பார்த்திங்கனா அப்பார்ட்மெண்ட் வீடுகளாக இருந்தாலும் சரி , கீழ இருக்கிற தனி வீடாக இருந்தாலும் சரி கொசுத்தொல்லைகாகவே நாம கதவ சாத்திட்டு வைத்திருப்போம். அப்பார்ட்மெண்ட் வீடுகளாக இருக்கும் போது எதிர் எதிர் வீடுகள் இருக்கும். அப்படி கதவை திறந்து வைக்க முடியாத சூழலில் இருக்கும். ஆனா இந்த கார்த்திகை தீபத்தன்று அனைத்து கதவுகளையும் திறந்து வைத்து நீங்கள் தீபம் ஏற்றுங்கள். அப்பத்தான் உங்களுடைய வாசல் வழியாக தெய்வங்கள் அனைவருமே வீட்டுக்குள்ள வருவாங்க.அதனால கதவை சாத்தி விட்டு தீபம் ஏற்றாதீர்கள். நல்லா வாசல் கதவை திறந்து வைத்து தீபம் ஏற்றுங்கள்.

கார்த்திகையும் , மருத்துவ காரணமா ?

இன்னும் நீங்கள் கவனித்து பார்த்தீங்கன்னா தெரியும். இந்த கார்த்திகை மாதத்தில் பணி காலம் , மழை காலம் என்பதால் கொசுத்தொல்லை ஜாஸ்தியாக தான் இருக்கும். ஆனால் இந்த கார்த்திகை தீபத்தன்று நீங்கள் ஏற்றிய விளக்குகள் அந்த கொசுக்களை உங்கள் வீட்டுக்குள் அண்டவிடாது. அதனாலதான் இந்த கார்த்திகை தீபம் மருத்துவ ரீதியாகப் பார்க்கும் போது ஒவ்வொரு நாளும் நீங்க விளக்கு ஏற்ற வேண்டுமென்று சொல்லப்படுது. நம்முடைய முன்னோர்களும் அதை தான் கடைப்பிடித்து வந்தார்கள்.

இன்று கார்த்திகை மாதம் முழுவதும் நம்மால் விளக்கு ஏற்ற முடிய வில்லை என்றாலும் கூட இந்த மூன்று நாட்களில்  கார்த்திகை தொடர்ந்து வரக்கூடிய  மூன்று நாட்களில் கண்டிப்பாக நாம் வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும். அப்படிங்குறதனால் நீங்கள் கொசு வந்து விடுமென்று பயப்பட வேண்டிய தேவை இல்ல. நீங்கள் ஏற்றக் கூடிய விளக்குகளை அந்த கொசுக்களை உங்கள் வீட்டில் அண்ட விடாது.  எனவே தீபம் ஏற்றினால் தலைவாசலை திறந்து வைத்து தீபம் ஏற்றுங்கள்.  அதே போல வீட்டில் இருக்க கூடிய அனைத்து அறைகளிலும் தீபம் ஏற்ற வேண்டும்.

எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் :

மொத்தம் 27 விளக்குகளை ஏற்றவேண்டும். ஏனென்றால்  27 நட்சத்திரங்கள் இருப்பதனால் 27 விளக்குகள் போடுகின்றோம்.  குறைந்தபட்சம் கண்டிப்பாக 27க்குள் இருக்க வேண்டும். அதற்கு மீறினால் அவர்களுடைய வசதியை பொருத்தது 50 விளக்குகள் 100 விளக்குகள் உங்களால் எத்தனை விளக்கு ஏற்ற முடியுமோ அத்தனை விளக்குகள் ஏற்றலாம். ஆனால் 27 விளக்குகள் கண்டிப்பாக உங்கள் வீட்டில் இருக்க வேண்டும். நீங்க பூஜையறையில் எப்போதும் ஏற்றக் கூடிய விளக்குகளை தவிர 27 விளக்குகள் ஏற்ற வேண்டும்.  எத்தனை விளக்கு ஏற்றினாலும் அதன் கூட்டுத்தொகை ஒற்றைப்படையில் இருக்க வேண்டும்.

உங்கள் குடும்பத்திற்கு ஒரு நல்லது நடக்கும். அதனால வீட்டில கூடிய பெண்கள் அந்த நாள் முழுவதும் விரதம் அனுஷ்டிப்பது நல்லது. நாம முறையாக கார்த்திகை தீபத்தை ஏற்றி வழிபடும் போது அனைத்து சக்திகளும் நம்ம வீட்டுக்குள்ள ஒளி வடிவத்தில் வந்து தங்கும் ,  நம் வீட்டிலேயே இருப்பார்கள் என்பதில் எந்த விதமான சந்தேகங்கள் இல்லை எனவே மேற்கூறியது போல கார்த்திகை தீபத்தை கொண்டாடுங்கள்.

Categories

Tech |