தமிழ் சினிமாவில் தீபாவளியை முன்னிட்டு நடிகர் கார்த்தியின் சர்தார் மற்றும் நடிகர் சிவாவின் பிரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆனது. கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபீஸிலும் வசூலை குவித்தது. இதேபோன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்நிலையில் பிரின்ஸ் மற்றும் சர்தார் திரைப்படத்தை ரசிகர்கள் குடும்பத்தோடு வந்து பார்த்து மகிழ்ந்துள்ளனர்.
பிரின்ஸ் படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைக்காததால், படத்தின் முன்பதிவு மற்றும் வசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் பல பாசிட்டிவான விமர்சனங்களை குவித்து வருவதால் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதன்முதலாக சிவகார்த்திகேயன் திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆனால் கார்த்தியின் அழகுராஜா மற்றும் காஷ்மோரா திரைப்படங்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆனது.
ஆனால் இந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இருப்பினும் கடந்த 2019-ம் ஆண்டு பிகில் திரைப்படத்துடன் ரிலீசான கார்த்தியின் கைதி சூப்பர் ஹிட் ஆனது. மேலும் சர்தார் திரைப்படத்தின் சக்சஸ் மீட் குறித்து நடிகர் கார்த்தி அறிவித்துள்ளனர். ஆனால் பிரின்ஸ் பட குழுவினர் இதுவரை வசூல் குறித்து எந்தவித தகவலையும் வெளியிடாமல் இருக்கின்றனர். பிரின்ஸ் மற்றும் சர்தார் படங்களை ஒப்பிடும் போது சர்தார் தான் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது என கூறப்படுகிறது.