Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நீங்களா இப்படி பண்ணீங்க…? கருகிய நிலையில் மீட்கப்பட்ட குழந்தை…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!

கருகிய நிலையில் மீட்கப்பட்ட குழந்தையை தந்தையே எரித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைக்கு அருகில் கடந்த 24- ஆம் தேதி கருகிய நிலையில் மீட்கப்பட்ட குழந்தை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை அதே மாவட்டத்திலுள்ள தொரப்பாடி பகுதியில் வசிக்கும் ஜோதி- சுவாதி தம்பதியினர்க்கு பிறந்த குழந்தை என்பது தெரியவந்துள்ளது.

இந்த தம்பதியினர் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் இவர்களது பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாமல் தனியாக வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து சுவாதி 7 மாதம் கர்ப்பமாக இருந்தபோது மருத்துவரிடம் பரிசோதனை செய்துள்ளார். அப்போது மருத்துவர் குழந்தைக்கு சரியான மூளை வளர்ச்சி இல்லை என்று சுவாதியிடம் கூறியுள்ளார். இந்நிலையில் சுவாதிக்கு பிரசவவலி ஏற்பட்டு  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு இறந்த நிலையில் பெண் குழந்தையை பிறந்தது.

எனவே காதல் திருமணம் செய்து கொண்டதால் பெற்றோர்கள் அவர்களை ஏற்கமாட்டார்கள் என்று குழந்தையின் சடலத்தை தந்தை ஜோதி கைப்பற்றி  மருத்துவமனைக்கு அருகில் சாலையோரம் அட்டைபெட்டி, வைக்கோல் போன்றவற்றால் எரித்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து ஜோதிக்கு காவல்துறையினர் அறிவுரை கூறி கருகிய நிலையில் மீட்கப்பட்ட குழந்தையை அவரிடம் ஒப்படைத்துள்ளனர். அதன்பின் ஜோதி குழந்தையின் சடலத்தை அடக்கம் செய்துள்ளார்.

Categories

Tech |