கரும்பு தோட்டத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரியலூர் கிராமத்தில் பாவாடை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தசாமி என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் 3 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் கரும்பு தோட்டத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சங்கராபுரம் தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் 2 ஏக்கர் கரும்பு சோகை எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சங்கராபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்