லாரியை வழிமறித்து கரும்புகளை சுவைத்த யானைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி லாரி ஒன்று கரும்புகளை ஏற்றிக் கொண்டு ஆசனூர்-காரப்பள்ளம் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த யானைகள் லாரி கரும்பு பாரம் ஏற்றி வருவதை பார்த்ததும் ஓடிவந்தன. இதனை பார்த்து டிரைவர் லாரியை நிறுத்தினார். அதன்பின் லாரியில் இருந்த ஒவ்வொரு கரும்பையும் யானைகள் தனது துதிக்கையால் எடுத்து சுவைத்து தின்றன.
இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி நிறுத்தியதும் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் நின்றன. இதனால் தமிழகம்-கர்நாடகம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சுமார் 15 நிமிடங்கள் அங்கேயே நின்று அதன் பின் தானாகவே யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதனையடுத்து மற்ற வாகனங்களும் செல்ல தொடங்கியது.