Categories
தேசிய செய்திகள்

பீகாரை அச்சுறுத்தும் கொரோனா… “ஊரடங்கு நீட்டிப்பு”… முதல்வர் அறிவிப்பு…!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பீகாரில் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் படிப்படியாகக் குறைந்து வருகிறது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவிக்கின்றது. ஆனாலும், நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வர ஒவ்வொரு மாநிலங்களிலும் பாதிப்புகளின் தன்மைக்கு ஏற்றவாறு ஊரடங்கு மற்றும் தளர்வுகள் நீட்டிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, நோய் பாதிப்புகளை குறைக்கும் விதமாக பீகார் மாநிலமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பீகாரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டி இருக்கிறது. பலியானோர் எண்ணிக்கை 500-ஐ கடந்துள்ளது.

இந்த நிலையில்  கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பீகாரில் செப்டம்பர் 6-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. பீகாரில் நோய் பாதிப்பு குறித்த உயர்மட்ட கூட்டம் நடந்தது. தற்போது மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால் மீண்டும் ஊரங்கை நீட்டிக்க பீகார் அரசு விரும்புவதாக உள்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பீகாரில் கொரோனா பாதிப்பு தொடர்பாக செப்டம்பர் 6-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு விதிமுறைகளின் கீழ் வரும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் எந்தவொரு பொது போக்குவரத்தும் அனுமதிக்கப்படாது. பொருட்களின் போக்குவரத்து தவிர, கட்டுமான நடவடிக்கைகளுக்கு எந்த ஒரு தடையும் இருக்காது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |