Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…! கருணாசுக்கு ஜோடி இவங்களா…? தயாரிப்பில் ஈடுபடவுள்ள சசிகுமார்…. சென்னையில் நடைபெற்ற பூஜை விழா….!!

நடிகர் கருணாசை வைத்து வெண்ணிலா கிரியேஷன் மூலம் சசிகுமார் தயாரிக்கவுள்ள புதிய படத்திற்கான பூஜை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றுள்ளது.

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் புகழ் வாய்ந்த நடிகை ரித்விகா பங்கேற்றுள்ளார். இந்நிலையில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய பி.எஸ்.ராம்நாத் என்னும் இயக்குனர் நடிகர் கருணாசை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை தயாரிக்கவுள்ளார்.

அந்தத் திரைப்படத்திற்கு “ஆதார்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் கருணாசுக்கு ஜோடியாக நடிகை ரித்விகா நடிக்கவுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் மனிஷா யாதவ், பிரபாகர், நடிகர் அருண்பாண்டியன் உட்பட பலரும் நடிக்கவுள்ளார்கள். இந்த “ஆதார்” என்னும் திரைப்படத்தை வெண்ணிலா க்ரியேஷன் மூலம் சசிகுமார் தயாரிக்கவுள்ளார்.

இதனையடுத்து இந்த படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசை இடம்பெறவுள்ளது. மேலும் மனோஜ் நாராயணன் “ஆதார்” என்னும் இந்த புதிய திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இப்படத்திற்கான பூஜை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றுள்ளது.

Categories

Tech |