திமுக தொடர்ந்தஅவதூறு வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ_வை விடுதலை செய்வதாக சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2006_ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்க்_குக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் ஒன்றை எழுதினார்.அதில் தமிழக முதல்வராக இருக்கும் கருணாநிதி மதிமுகவை உடைக்க முயற்சிக்கின்றார் என்று பல்வேறு புகார்களை அப்போதைய முதல்வர் கருணாநிதி மீது முன்வைத்து அறிக்கை எழுதி இருந்தார்.இந்த செய்தி பத்திரிக்கையில் வெளியாகியதை அடிப்படையாக வைத்து வைகோ மீது திமுக சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. MP , MLA_க்களின் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் வந்த பிறகு இந்த வழக்கின் விசாரணை இங்கு நடைபெற்றது.
நீதிபதி கருணாநிதி முன்னிலையில் வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இதன் தீர்ப்பு கடந்த முறை வெளியாகுமென பட்டியலிட்டபட்டது. அப்போது வைகோ உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் ஆஜராகாததால் இன்று அந்த தீர்ப்பு வெளியாகியது. அப்போது நீதிபதி சுப்பையா இந்த வழக்கின் தீர்ப்பை மேலும் கால தாமதப்படுத்த முடியாது என்று கூறி குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக வெறும் பத்திரிகை செய்திகள் மட்டும் தான் ஆதாரமாக உள்ளது , சரியான ஆதாரம் இல்லாததால் வைகோவை விடுதலை செய்வதாக அறிவித்தார்.அப்பாதையை முதல்வர் கருணாநிதியை குற்றம் சாட்டிய வழக்கை நீதிபதி கருணாநிதி முடித்து வைத்தார்.