Categories
அரசியல் மாநில செய்திகள்

கருணாநிதிக்கு பயம்… ஜெயிலில் போட்டு விடுவார்கள்…. பாய்ந்த அமைசர் ஜெயக்குமார் …!!

மத்தியில் கூட்டணி ஆட்சியில் திமுக இருந்த போது தமிழ்நாட்டின் உரிமையை காவு கொடுத்தார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் திமுக மீது பாய்ந்துள்ளார்.

வேளாண் சட்டமசோதாவையோ கண்டித்து முக.ஸ்டாலின் பெரிய அளவுக்கு அறிக்கை விட்டது. உண்மைக்கு மாறான ஒரு அறிக்கை. அது வேளாண் மக்களை , விவசாய மக்களை திசை திருப்புகிற செயல். முதலமைச்சர் சொன்னது போல, எந்த விதத்திலும் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்காது.  எந்த விதத்திலும் அவர்களுடைய வாழ்வுரிமை, நெல் விலை நிர்ணயம் விவசாய மக்களை பாதிக்காது. அவர்களுக்கு உரிய  நியாயமான விலை கிடைக்கும் வகையில் தான்  இந்த சட்டம் இருக்கிறது. எனவே நீண்ட நேரம் விவாதம் செய்யப்பட்டு, அறிக்கை எல்லாம் கொடுக்கப்பட்டு, முதலமைச்சரே கிட்டத்தட்ட  அரை மணி நேரம் வீடியோவில் பேசியுள்ளார்.

இதையெல்லாம் ஏதேதோ காதில ஊதின மாதிரி…  கேட்டும் கேட்காத மாதிரி இருந்தா நாங்க ஒன்றும் செய்வதற்கில்லை. அரசியல் காரணத்திற்காக, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, முழுக்க முழுக்க டெல்டா மாவட்ட விவசாயிகள் மட்டுமல்ல… ஒட்டு மொத்த தமிழ் நாட்டு விவசாயிகளின் உரிமைகளை காவு கொடுத்தது திமுக. 17வருடம் மத்திய அரசில் ஆட்சியில் இருந்த போது காவிரி நதிநீர் பிரச்சினையில் உரிமை குரல் கொடுத்து வாங்கிக் கொடுத்திருக்கலாம்.

 கர்நாடக அரசு மேகதாதுவில் அணை குறுக்கே அணை கட்டுவதை  தடுத்து இருக்கலாம். ஆனால் உச்ச நீதிமன்றம் சென்ற அந்த விவசாயிகளை கூட அன்று போக விடாமல் தடுத்தது யார் ?  திமுக தலைவராக இருந்த அன்றைக்கு இருந்த மு. கருணாநிதி அவர்கள் அன்றைக்கு சர்க்காரியா கமிஷனுக்கு பயந்து… தன்னை ஜெயிலில் போட்டு விடுவார்கள் என்பதற்க்காக விவசாயிகளை வலியுறுத்தி கேஸ் போடாமல் அணையை கட்ட விட்டார்.

கச்ச தீவும் அதே மாதிரி தான்.  சர்க்காரியா கமிஷன் பாய்ந்து விடுமோ…  இந்திரா காந்தி அம்மையார் உள்ளே தள்ளி விடுவார்கள் என்று பயந்து அன்றைக்கு தமிழ்நாட்டின் உரிமையை காவு கொடுத்தவர்கள். இன்று விவசாயிகளைப் பற்றி பேசுவது வெட்கக்கேடான, வேதனையான செயல். அவர்கள் பேசுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Categories

Tech |