கலைஞரின் வாழ்க்கை சிறுகுறிப்பு
கலைஞர் மு.கருணாநிதிதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர். தமிழ்நாட்டின் முதல்வராக ஐந்துமுறை பதவியில் இருந்தவர் . 1969 ஆம் வருடம் முதன்முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006 ஆம் வருடம் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் உரையாடல், கதை போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர். இவர் எழுதிய ‘தூக்குமேடை’ நாடகத்தை தொடர்ந்து எம்.ஆர். ராதா, இவருக்கு ‘கலைஞர்’ என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார்.
இந்திய அரசியலில் தொடர்ந்து பங்காற்றி மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆனார். இவர் 2018 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் நாள் தனது 94 ஆம் அகவையில் இயற்கை எய்தினார்.
கலைஞர் பெற்ற விருதுகள்
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் (அ) பெப்சி மாநாட்டில் உலகக் கலைப் படைப்பாளி என்ற விருது கருணாநிதிக்கு வழங்கப்பட்டது.
1970 ஆம் ஆண்டு, பாரிஸில் நடந்த உலக தமிழ் மாநாட்டில் கருணாநிதி ஒரு கெளரவ உயர் பதவியாளராக இருந்தார்.
மலேசியாவில் நடந்த உலக தமிழ் மாநாட்டைத் 1987 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்.
‘உலக தமிழ் செம்மொழி மாநாட்டின்’ அதிகாரபூர்வமான கருப்பொருள் பாடலை உருவாக்கும் பொறுப்பை 2010 ஆம் ஆண்டு ஏற்றார். இதன் பின்னணி இசையை ஏ. ஆர். ரகுமான் அமைத்தார்.