Categories
சினிமா தமிழ் சினிமா

இசையமைப்பாளராக அறிமுகமாகும் கருணாஸின் மகன்… எந்த திரைப்படத்தில் தெரியுமா…?

நடிகர் கருணாஸின் மகன் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கின்றார்.

இயக்குனர் கிட்டு தற்போது சல்லியர்கள் என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தை கருணாஸ் தனது ஐசிடபிள்யூ நிறுவனம் மூலம் தயாரிக்கின்றார். இத்திரைப்படத்தில் சத்யாதேவி, கருணாஸ், திருமுருகன், ஜானகி என பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள்.

இத்திரைப்படத்தின் வாயிலாக கருணாஸின் மகன் கென் கருணாஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கின்றார். இவர் ஈஸ்வர் என்ற அவரின் நண்பருடன் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினர், பிரமுகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் பங்கேற்றார்கள். அப்போது பேசிய கென் கருணாஸ், இத்திரைப்படத்திற்கு என் நண்பன் ஈஸ்வர் தான் மெயின் இசை அமைப்பாளர். நான் அவனுக்கு பக்கபலமாக பணியாற்றி இருக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |