Categories
மாநில செய்திகள்

கறுப்பர் கூட்டத்தை ஓட ஓட விரட்டுவோம்… எல் முருகன் அதிரடி..!!

தமிழகத்திலுள்ள கருப்பர் கூட்டத்தை காவிக் கூட்டம் ஓட ஓட விரட்டி அடிக்கும் என மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பாஜக மகளிரணி மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாநில பாஜக தலைவர் திருமுருகன் அவர்கள் பங்கேற்றார். கூட்டம் நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழ்நாட்டில் பல நல்ல திட்டங்களை அமல்படுத்தி உள்ளது. கந்த சஷ்டி கவசத்தை தவறாக சித்தரித்த கருப்பர் கூட்டத்தை விரட்டி அடித்த காவிக் கூட்டத்திற்கு எனது நன்றிகள். அதோடு இந்த காவிக் கூட்டம் தமிழ்நாட்டில் இருக்கும் கருப்பர் கூட்டத்தை ஓட ஓட விரட்டி அடிக்கும். பாஜக-அதிமுக கூட்டணியில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது.

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு கொண்டு வரும் நல்ல திட்டங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்ணை மூடிக்கொண்டு தடுக்கிறார். விவசாயம் பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும் மத்திய அரசு என்ன சட்டம் கொண்டுவந்தாலும் அதனை எதிர்த்து நிற்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளார் இந்தியாவின் முதுகெலும்பாக திகழும் விவசாயத்தை மேம்படுத்த அதிக தொழில்நுட்பத்தை  கொண்டு வருவதே இந்த சட்டம். கன்னியாகுமரியை பொறுத்தவரை நாங்கள் அங்கு பல முறை வெற்றி பெற்றுள்ளோம் அது எங்களுக்கு பலம் நிறைந்த பகுதியாகும். வேட்பாளர் குறித்த முடிவை மத்திய தலைமை எடுக்கும்” என தெரிவித்துள்ளார். இதனிடையே செயற்குழு கூட்டத்தின் போது மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |