Categories
சமையல் குறிப்புகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

மாலை வேளையில் அருமையான கருப்பட்டி சுக்கு காபி..!!!

சளி, இருமலுக்கு சிறந்த பானம்.

சுக்கு பொடி தயார் செய்து கொள்ள தேவையானவை:

உலர்ந்த இஞ்சி/சுக்கு தூள்            – 1/2 கப்
மல்லி                                                        – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம்                                                        – 1 டீஸ்பூன்
மிளகு                                                        – 1 டீஸ்பூன்
பனங்கற்கண்டு                                  – 3 டேபிள் ஸ்பூன்.

காபி போட தேவையானவை:

சுக்கு பொடி                                          – 1 டீஸ்பூன்
கருப்பட்டி                                               – 2 டேபிள் ஸ்பூன்

தண்ணீர்                                                 – 1 கப்

செய்முறை:

முதலில் சுக்கு போடி தயார் செய்து கொள்ளவேண்டும்.. பின் அதனை காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்து கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். அதில் சுக்குப் பொடி ஒரு டீஸ்பூன் மற்றும் கருப்பட்டியை சேர்த்து, 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

பின்பு அதனை இறக்கி வடிகட்டினால், சூடான கருப்பட்டி காபி ரெடி!!

Categories

Tech |