Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மின் மயான ஊழியர்களுக்கு… காவல்துறையினரின் உதவி… அளிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள்…!!

மின்மயானத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு காவல்துறையினர் அத்தியாவசிய பொருட்களை வழங்கி உள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் இருக்கும் பாலம்மாள்புரம் பகுதியில் அமைந்துள்ள மின் மயானத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியானது டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டரான சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றுள்ளது. அதன்பின் துணை போலீஸ் சூப்பிரண்டு முகேஷ் ஜெயக்குமார், முன்னிலையில்  கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் மின்மயானத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அத்தியாவசிய  பொருட்களை வழங்கியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பல காவல் துறையினர்கள் கலந்து கொண்டனர்.

Categories

Tech |