Categories
கரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கிய அமைச்சர்…!!

கரூரில் கொரோனா விழிப்புணர்வு செய்து தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கியுள்ளார்

கரூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவுக்கு பின்னர் அரசு மருத்துவமனைகளில் தயார் செய்துள்ள முன்னேற்பாடுகள் மற்றும் ஊராட்சிகளில் பணியாற்றிவரும் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதனையடுத்து இன்று கரூர் மாவட்டத்தில் இருக்கும் குளித்தலை பகுதியில் அரசு மருத்துவமனையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் ஆய்வு நடத்தினார்.

அப்போது பொதுமக்களுக்கு  கொரோனா குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கியும் கைகளை சுத்தம் செய்ய வேண்டியதன் அவசியம் மற்றும் முககவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். அதோடு அங்கிருக்கும் அம்மா உணவகத்தில் உணவு முறையாக வழங்கப்படுகிறதா  என்பதையும் கேட்டறிந்து கொண்டார்.

பின்னர் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கள்ளப்பள்ளி ஊராட்சியில் பணியாற்றிவரும் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை கொடுத்து, தடுப்பு நடவடிக்கைகளில் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தினார்.

Categories

Tech |