கரூரில் ஆபாச வீடியோக்களைசமூகவலைத்தளத்தில் பகிர்ந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூரில் உள்ள சலூன் கடையில் வட மாநிலத்தை சேர்ந்த வியாசர் என்பவர் கடந்த ஆறு மாதங்களாக பணியாற்றி வருகிறார். இவர் தனது செல்போனில் சிறுவர்களின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து அவற்றை மற்றவர்களுக்கும் பகிர்ந்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வியாசர் ஜானியை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.