இறைச்சி கடைகள் மூடப்பட்டதால் கருவாடை வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
தமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து கடைகளையும் மூட அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் அசைவப் பிரியர்கள் இறைச்சி, மீன்களை சாப்பிட முடியாமல் கவலையில் இருந்துள்ளனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் மத்தி, நெத்திலி போன்ற வகையான கருவாடு விற்பனை செய்யப்படுகிறது.
இதனை அடுத்து அசைவ பிரியர்கள் இறைச்சி கடை மூடப்பட்டதால் இந்த கருவாடுகளை வாங்குவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, இறைச்சியை அன்றே சமையல் செய்ய வேண்டுமெனவும், ஆனால் இந்த கருவாடுகளை தேவைப்படும் போது சமையல் செய்து சாப்பிடலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.