Categories
குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

கருவில் குழந்தைகளின் எடையை அதிகரிக்க…!

கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் இருக்கின்ற குழந்தையின்  உடல் எடையை அதிகரிக்க…

  • ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலமாக வயிற்றில் இருக்கின்ற குழந்தையின் உடல் எடையை அதிகரிக்கலாம். ஆரோக்கியமான உணவு என்றால் அதிக உணவு இல்லை. அதிகமாக சாப்பிட்டால்  நம் உடல் எடை தான் அதிகரிக்கும். குழந்தையின்  உடல் எடை அதிகரிக்காது.
  • ஐந்தாவது மாதத்தில் இருந்து குழந்தையின் உடல் எடையை அறியலாம். குழந்தையின்  உடல் எடை வழக்கத்திற்க்கு மாறாக குறைவாக இருந்தால் தவறாமல் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.
  • கீரை வகைகள், பருப்பு வகைகள், தானிய வகைகள், பால், முட்டை, இறைச்சி வகைகள் போன்ற உணவுகளை தவறாமல் சாப்பிட வேண்டும்.
  • ஒரு நாளைக்கு ஐந்து, ஆறு வேளை கூட சாப்பிடலாம். ஆனால் அரிசி உணவு ஒருவேளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
  •  காய்கறிகளை அதிகமாக சாப்பிட வேண்டும். கீரை வகைகள், பழ வகைகள் தவறாமல் சாப்பிட வேண்டும்.
  • மாலை நேரங்களில் கொண்டை கடலை, சத்துமாவு கஞ்சி, முருங்கை கீரை சாப்பிடலாம் ரொம்ப நல்லது.
  •  முருங்கை கீரையை சாப்பிடுவதால் உடலில் ரத்தம் அதிகரிக்கும். ரத்தம் குறைவாக இருப்பதால் ரத்தசோகை ஏற்படும். அது உங்களை மட்டுமின்றி குழந்தையையும் பாதிக்கும்.
  • குழந்தைகளுக்கும், நமக்கும் போதிய சத்து கிடைக்க வைட்டமின் மாத்திரைகளையும் தவறாமல் எடுத்துக்கொள்ளவேண்டும்.
  • ஏழாவது மாதத்திற்கு பிறகு கட்டாயம் மகப்பேறு மருத்துவரை சந்திக்க வேண்டும்.
  • குழந்தையின் உடல் எடை அதிகரிக்க உலர்ந்த திராட்சை, பாதாம் பருப்பு, அத்திப்பழம், மாதுளம்பழம், பீட்ரூட், கேரட், வேர்க்கடலை போன்ற உணவுகளை தவறாமல் சாப்பிட வேண்டும்.

Categories

Tech |