கருவுற்ற மூன்று மாதங்களில் குழந்தை உருவாகும் அழகு :
உங்கள் குழந்தை இப்போதும் உங்கள் உள்ளங்கைக்குள் அடங்கும் அளவுக்கு சிறிதாகத்தான் இருக்கிறது.
குழந்தையின் தலையில் கூந்தலும், உடல் முழுவதும் மென்மையான ரோமங்களும் வளர்த்துக்கொண்டு இருக்கிறது.
அவளுடைய விரல்நுனிகளில் சின்னஞ்சிறு கைரேகைகள் உருவாகிக்கொண்டு இருக்கின்றன.
உங்கள் கருப்பையின் உள்ளே, உங்கள் குழந்தை திரவத்தின் மீது பாதுகாப்பாக மிதந்துகொண்டு இருக்கிறது.
அந்த திரவம் அவள் எதன் மீதும்மோதிக்கொள்ளாமல் பாதுகாப்பதோடு கதகதப்பாகவும் வைத்துக்கொள்கிறது.
குழந்தைகளுக்கு விக்கல் வரக்கூடும். இது உங்கள் கருப்பைக்குள்ளே தொடர்ச்சியாக மேளம் அடிப்பதைப் போல உணரப்படும், இது சில நிமிடங்கள் நீடிக்கலாம்.
இப்போது உங்களுக்கு குமட்டல் குறைந்து, உடனடியாக பசி எடுப்பதுபோல உணர்வீர்கள் நன்றாக சாப்பிடுங்கள்.
ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையான உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
ஒவ்வொரு வேளையும் ஒரு கை உணவு அதிகமாக சாப்பிடுங்கள்.
உங்கள் உணவு கெட்டுப்போனதாகவும் பழையதாகவும் இல்லாமல் பாதுகாப்பானதாகவும் புதிதாகவும் இருப்பதை உறுதிசெய்யவும்,.
படிப்படியாக உங்கள் களைப்பு குறைந்து அதிக தெம்போடு இருப்பதாக உணர்வீர்கள்.
இப்போது உங்கள் கர்பப்பைக்குள் உருவாகியிருக்கும் பனிக்குடம், உங்கள் குழந்தைக்கு ஆதரவாக இருக்கும்.
உங்கள் குழந்தை பிறந்தவுடன் அது எடுக்கப்பட்டுவிடும்..
உங்கள் இடுப்பையும் மார்பையும் சுற்றி அணிந்திருக்கும் ஆடைகள் சற்று இறுக்கமாக இருப்பதை உணர்வீர்கள்.
விரைவில் உங்கள் அடிவயிற்றில் ஒரு சிறு மேடு போல உங்கள் கர்ப்பம் காட்சியளிக்கத் தொடங்கும்.
கர்ப்பமாக இருப்பதால் கிருமிகளை எதிர்க்கும் சக்தி உங்களிடம் குறைவாக இருக்கும், ஆகையால்உங்களுக்கு இருமலும் சளி பிடிப்பதும் அதிகரிக்கலாம்.
உங்கள் கைகளை சோப்பு மற்றும் சுத்தமான, பாதுகாப்பான தண்ணீரினால் அடிக்கடி கழுவுங்கள். கிருமிகளை ஒளிக்க இதுவே சிறந்த வழி.