Categories
மாநில செய்திகள்

“காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி”….. கோவையிலிருந்து சிறப்பு ரயில்….. பயணிகளுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு…..!!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழக வளாகத்தில் காசி தமிழ் சங்கம் விழாவை நேற்று பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்த நிலையில் இசை ஞானி இளையராஜா கலந்து கொண்டு பிரதமர் மோடியை பற்றி பல்வேறு விஷயங்களை கூறி புகழ்ந்து தள்ளினார். அதன்பிறகு தமிழகத்துக்கும் காசிக்கும் இடையே உள்ள பழைய தொடர்புகளை புதுப்பிக்கும் விதமாகவும், இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் விதமாகவும், மத்திய அரசு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியை காண செல்பவர்களுக்காக சிறப்பு ரயில் சேவையானது இயக்கப்படுகிறது.

அதன்பிறகு அதிகாலை 4.40 மணியளவில் கோவையிலிருந்து சிறப்பு ரயில் இயங்கியது. இந்த ரயிலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 83 பயணிகள் சென்றனர். அதன் பிறகு முதல் ரயிலில் ஏராளமான மாணவர்களும், 2-வது ரயிலில் கைவினை கலைஞர்கள், விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் இசை கவிஞர்கள் என ஏராளமானோர் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் கோவையிலிருந்து ‌ நிகழ்ச்சிக்கு சென்ற ரயில் பயணிகளை கோவை மாவட்ட பாஜக மாலை அணிவித்தும் மலர்  தூவியும் வரவேற்றதோடு உற்சாகமாக அவர்களை ரயிலில் ஏற்றி வழி அனுப்பி வைத்தனர். மேலும் இதன் காரணமாக கோவை ரயில் நிலையத்தில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

Categories

Tech |