ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ய கோரிய மசோதாவிற்கான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை நீக்க கோரிய மசோதா நேற்று பாராளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இன்று மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதங்கள் தற்போது நடைபெற்று முடிந்துள்ளன.
ஏற்கனவே பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் நிறைவேற்ற மசோதாவிற்கு மக்களவையிலும் கடும் எதிர்ப்பு எழுந்ததோடு, இந்தியா முழுவதும் இருக்கக் கூடிய அரசியல் கட்சிகள் இடது ஜனநாயக இயக்கங்கள் உள்ளிட்டவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தப்பட்டு இதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.. இந்நிலையில் இதையடுத்து இன்று மாலை காஷ்மீர் 370 வது சட்டப்பிரிவை ரத்து செய்யக்கோரிய மசோதாவிற்கான வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.