Categories
அரசியல் தேசிய செய்திகள்

காஷ்மீர் விவகாரம் : ஏன் என்று கேட்டால் பதிலில்லை…. ப.சிதம்பரம் ட்வீட் ..!!

மெகபூபா முப்தியின் மகள் வீட்டுக்காவலில் உள்ளார்.ஏன் என்று கேட்டால் பதிலில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்ட பிறகு இந்திய ராணுவம் பாதுகாப்பு தொடர்ந்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக 144 தடை உத்தரவு , தொலைத்தொடர்பு சேவை இரத்து என பல்வேறு கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்க்கப்படு வருகின்றது. 2 வாரங்களுக்கு பின் இன்று அங்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

Image

இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்வீட்_டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில் , ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் இல்லை. இணையசேவை மீண்டும் முடக்கப்பட்டுள்ளது.மெகபூபா முப்தியின் மகள் வீட்டுக்காவலில் உள்ளார்.ஏன் என்று கேட்டால் பதிலில்லை இணைய சேவை முடக்கம், வீட்டுக்காவல் இருந்தும் இயல்பு நிலை திரும்பியதாக கூறுகிறார்கள்  என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |