Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் விவகாரம் : ராகுலுக்கு நெருக்கமான காங்கிரஸ் தலைவர் ஆதரவு…!!

காஷ்மீர் விவாகரத்துக்கு காங்கிரஸ்சின் முக்கிய தலைவரும் , ராகுல் காந்தியின் நெருக்கமானவருமான ஜோதிராவ் சிந்தியா ஆதரவு தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு இரத்து செய்யப்பட்டு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேஷமாக மாற்றி மத்திய அரசு கொண்டவந்த காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில்  மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்க்கு டெல்லி முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னாள் முதல்வர்கள் மாயாவதி மற்றும் சந்திரபாபு நாயுடு ஆதரவு தெரிவித்தனர்.

jammu amithsha க்கான பட முடிவு

இந்நிலையில் இந்த மசோதா_வை இன்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.இதற்க்கு காங்கிரஸ் , திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின்  முக்கிய தலைவர் உருவான ஜோதிராவ் சிந்தியா இந்த மசோதா_வுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ஜோதி ராவ் சிந்தியா க்கான பட முடிவு

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரும் , ராகுல் காந்திக்கு மிக நெருக்கமான ஜோதிராவ் சிந்தியா நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பெரும் பங்காற்றியவர்.மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற உறுதுணையாக இருந்தவர். காங்கிரஸ் கட்சி இந்த மசோதாவை எதிர்த்து வரும் இந்த சூழலில் இவரின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் இந்த தாக்கத்தை ஏற்படுத்துமென்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

https://twitter.com/JM_Scindia/status/1158729410507182080

Categories

Tech |