ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இரத்து செய்து கடந்த 6_ஆம் தேதி மத்திய அரசு அதற்கான மசோதாவை நிறைவேற்றியது. மேலும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என்ற யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் வரும் 22ஆம் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் அனைத்து கட்சி எம்பிக்களும் பங்கேற்கும் ஆர்ப்பாட்டத்தை திமுக நடத்துகின்றது.
இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் , அமைதி திரும்புகிறது என்று அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகள் மூலமாக சொல்லி கொண்டு கடந்த5_ஆம் தேதி முதல் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரையும் கைது செய்து , தொலைத் தொடர்பை துண்டித்து , காஷ்மீரில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமையை பாஜக ஏற்படுத்தியுள்ளது.
83 வயதிலும் ஒருமைப்பாட்டுக்காக குரல் கொடுத்த அப்துல்லா , அவரின் மகன் உமர் அப்துல்லா , முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி ஆகியோர் 14 நாட்களுக்கு மேலாக கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் , பேச்சுரிமை , அடிப்படை உரிமை ஆகிய அனைத்தையும் மத்திய அரசு பறித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுளார்.
1947 இல் இருந்து இந்தியாவின் ஒரு அங்கமாக இருந்த காஷ்மீரை இன்று அடக்குமுறையில் பாஜக தனிமைப்படுத்தி வைத்துள்ளது. இது பற்றி உள்துறை அமைச்சர் அமித் ஷா கவலைப்படுவதாக தெரியவில்லை. காஸ்மீரில் ஜனநாயகப் படுகொலை செய்துவிட்டு அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை ஏற்படுத்திய பாஜக காஷ்மீரில் சாதித்து விட்டோம் என்று ஒருவகை அரசியலை செய்கின்றது என்று சுட்டிக்காட்டி டெல்லி ஜந்தர் போராட்டத்தில் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைத்து நாடாளுமன்ற கட்சிகளும் பங்கேற்க்க வேண்டுமென்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .