Categories
தேசிய செய்திகள்

“காஷ்மீர்” சிறப்பு அந்தஸ்து ரத்து… பாகிஸ்தானில் உருவபொம்மை எரித்து போராட்டம்..!!

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக பாகிஸ்தானில் உருவ பொம்பைகள் எரிக்கப்பட்டு தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

காஷ்மீர் மாநிலத்தில் அளிக்கப்பட்டு வந்த சிறப்பு தகுதி நீக்கப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்கள் மாற்றப்பட்டுள்ளன. இதனால் அங்கு வன்முறைகள் ஏற்படுவதைத் தடுக்க லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஒவ்வொரு வீதியிலும் குவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைக்கப்பட்டு, மருத்துவமனைக்கு செல்ல மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

Image result for காஷ்மீர் பாகிஸ்தான் போராட்ட்டம்

ஜம்மு-காஷ்மீர் முழுமைக்கும் 144 தடை உத்தரவை நான்காவது நாளாக அமலில் உள்ளது. இதனால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால் அவர்கள் பட்டினியால் வாடுகின்றனர். இணைய மற்றும் தகவல் சேவை தொடர்புகளும் நான்காவது நாளாக தொடர்ந்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் யூசுப் தமிகாரி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தொடர்ந்து ரகசிய இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சிறப்புத்தகுதி நீக்கப்பட்டதற்கு பாகிஸ்தானில் உருவபொம்பைகள் எரித்து தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

Categories

Tech |