Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பரபரப்பு…. ஊடுருவ தயார் நிலையில் தீவிரவாதிகள்…. ராணுவ தளபதி அதிர்ச்சி தகவல்….!!!

காஷ்மீருக்குள் 200 தீவிரவாதிகள் ஊடுருவ தயார் நிலையில் உள்ளதாக ராணுவ தளபதி தகவல் அளித்துள்ளார்.

காஷ்மீரின் உதம்பூர் நகரில் நேற்று வடக்கு மண்டலத்தின் ராணுவ தளபதி உபேந்திரா திவிவேதி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பேசியதாவது, கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் நடத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் பிறகு எல்லைகளிள்  போர்நிறுத்த மீறல்கள் குறைந்துள்ள நிலையில் 13 மாதங்களில் 3 விதிமீறல்களே நடந்துள்ளன.

இருப்பினும் எல்லைக்கு அப்பால் தீவிரவாத கட்டிடங்கள் உள்ள நிலையில் 6 பெரிய மற்றும் 29 சிறிய அளவிலான தீவிரவாத முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கட்டமைப்புகள் நீடிப்பதற்கு பாகிஸ்தான் ராணுவம் தான்காரணம். அதன் ஒத்துழைப்பையும் மறுக்க முடியாது. இந்த நிலையில் பாகிஸ்தான் எல்லைக்கு அப்பால் உள்ள காஷ்மீருக்குள் 200 தீவிரவாதிகள் ஊடுருவ தயார் நிலையில் உள்ளனர். இருப்பினும் இதனை தடுக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதற்கிடையில் தீவிரவாதிகள் மலை மற்றும் வான் பகுதி வழியாக மட்டும் இல்லாமல் ஜம்மு, பஞ்சாப், நேபாளம் ஆகிய இடங்களில் சர்வதேச எல்லை வழியாக உடுருவி வரும்நிலையில் அவர்களை அடையாளம் கண்டு அளிப்பது தான் எங்கள் நோக்கம். இந்த நிலையில் காஷ்மீர் பகுதியில் தற்போது 40 முதல் 50 உள்ளூர் தீவிரவாதிகள் உள்ள நிலையில் வெளிநாட்டு தீவிரவாதிகள் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. மேலும் இதுவரை 21 வெளிநாட்டு கொல்லப்பட்ட நிலையில் அவர்கள் போதிய பயிற்சி இன்றி வெறும்கைதுப்பாக்கியுடன் இருந்தனர்.

இதற்கிடையில் வளர்ந்து வரும் இளைய சமுதாயத்தினரிடம்  மூளைச்சலவை செய்து தீவிரவாத இயக்கத்தில் சேர்ப்பது கவலை அளிக்கிறது. இதனால் அவர்களை இதிலிருந்து விடுவிக்க முயற்சி செய்து வருகிறோம். இதனைத் தொடர்ந்து காஷ்மீர் சாலைகளில் ராணுவத்தினர் தேவை இல்லை என்று நாள் வரும்போது ஆயுதப்படை அதிகார சட்டம் தானாகவே போய்விடும்.

இது மட்டுமின்றி அமர்நாத் யாத்திரை வருபவர்களின் எண்ணிக்கை கடந்த 2019ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.  அப்போது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படாத அளவிற்கு கண்காணித்து வரும் நிலையில் கூடுதல் படைகள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.

Categories

Tech |