Categories
மாவட்ட செய்திகள்

காசி மீது கந்து வட்டி, இருசக்‍கர வாகன மோசடி வழக்கு…!!!

கந்து வட்டி மற்றும் ஆறு லட்ச ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை மோசடி செய்த வழக்கில் ஏற்கனவே பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு ள்ள காசி மீது நாகர்கோவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது

பெண் மருத்துவர்  உட்பட தமிழகம் முழுவதும் சமூக வலைத்தளங்கள் மூலமாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மயக்கி, பாலியல் வன்முறை செய்ததோடு அதனை வீடியோவாக எடுத்து மிரட்டி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கன்னியாகுமரியைச் சேர்ந்த காசி என்பவர் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதன் இடையே நாகர்கோவிலைச் சேர்ந்த பிரைட் என்ற இளைஞரருக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்து.

ஆறு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை, போலி ஆவணம் மூலம் தனது பெயருக்கு மாற்றிக் கொண்டதாக காசி மீது வடசேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் வட்டாரப் போக்குவரத்து தரகரான நாராயணன் என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கந்துவட்டி, மோட்டார் சைக்கிள் மோசடி வழக்கு தொடர்பாக, காசி அவரது தந்தை தங்கபாண்டியன் வட்டார போக்குவரத்து தரகர் நாராயணன் ஆகியோர் மீது சிபிசிஐடி போலீசார் நாகர்கோவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

Categories

Tech |