Categories
மாநில செய்திகள்

பெண்களை ஏமாற்றி மோசடி செய்த காசி நாகர்கோயில் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்…!

பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த நாகர்கோவில் இளைஞர் காசி நாகர்கோயில் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டான். கைது செய்யப்பட்ட இளைஞர் காசியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். காசியை போலீஸ் காவலில் எடுப்பதற்காக அளிக்கப்பட்ட மனு மீது விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி என்ற சுஜி. இவன், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதலங்களில் தன்னை பணக்காரன்போல் காட்டி கொண்டான். இதனால், அவரிடம் மயங்கிய பெண் டாக்டர், விமான பணிப்பெண் உள்ளிட்டோரிடம் பழகி அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில், சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் துணிச்சலாக புகார் கொடுத்ததால், போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவனது, லேப்டாப்பில் 80 பெண்களுடன் பல்வேறு கோணங்களில் நெருக்கமாக இருந்த வீடியோ, படங்களை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் காசி பயன்படுத்திய போலி முகநூல் கணக்குகள், இன்ஸ்டாகிராம் கணக்குகள் அனைத்தையும் போலீசார் முடக்கியுள்ளனர். தமிழகம் முழுவதும் பல பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டி பணம்பறித்த காசி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. காசியின் நெருங்கிய வட்டத்தில் உள்ள 20 பேரை கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் சில அரசியல் கட்சியின் நிர்வாகிகளின் பெயர்களும், வி.ஐ.பிக்களின் பெயர்களும் அடிபடுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தற்போது காசி மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே பெண்களை ஏமாற்றிய வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதான காசி மீது தற்போது கந்து வட்டி வழக்கும் இவன் மீது போடப்பட்டுள்ளது.

வடசேரி காவல்நிலையத்தில் புதிதாக ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ட்ராவிட் என்பவர் காசி மீது புகார் கொடுத்துள்ளார். காசியிடம் வட்டிக்கு பணம் வாங்கி பின்பு அதனை கொடுத்த பிறகும், தனது வாகனம் மற்றும் முக்கிய பத்திரங்களை தரவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 3 புகார் அடிப்படையில் இவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், காசியை போலீஸ் விசாரணை நடத்தக்கோரி அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளான்.

Categories

Tech |