காசிமேடு மார்க்கெட்டில் மீன் வாங்க மக்கள் கூட்டமாக குவிந்ததால் கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டு உள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதில் ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன் படி நாளை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில், சென்னையின் மிக பெரிய மீன்பிடி சந்தையான காசிமேட்டில் மீன் வாங்குவதற்காக காலையிலேயே ஏராளமானோர் குவிந்தனர். சமூக விலகளை கடைபிடிக்காமல் ஏராளமானோர் குவிந்ததால் கொரோனா தொற்று அச்சம் ஏற்பட்டுள்ளது.