பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பறித்த நாகர்கோவில் இளைஞர் காசியை சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே, காசி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு கந்துவட்டி வழக்கு கடந்த வாரம் பதிவு செய்யப்பட்டது. வடசேரி காவல்நிலையத்தில் காசியின் மீது மேலும் புதிதாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், காசியின் வழக்கு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் கடுமையானதாக இல்லை. அவர் வெளியில் வர முடியாத வகையில் கடுமையான வழக்கு பதிவு செய்ய வேண்டும்’ என தெரிவித்தார்.