Categories
மாநில செய்திகள்

பெண்களை ஏமாற்றி பணம் பறித்த நாகர்கோவில் காசியின் தந்தை கைது..!!

பெண்களை ஏமாற்றி பணம் பிரித்த நாகர்கோவில் காசியின் தந்தையை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மகன் காசி தொடர்புடைய தடயங்களை அளித்த புகாரில் அவரது தந்தை தங்கபாண்டியன் கைது செய்யப்பட்டார். காசி வழக்கில் ஏற்கனவே அவனது நண்பர்கள் இரண்டு பேர் கைதான நிலையில், தற்போது அவரது தந்தை கைது செய்யப்பட்டார்.

பெண் மருத்துவர் உள்பட பல இளம்பெண்களுடன் பழகி ஆபாசபடம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் காசி மற்றும் அவனது நண்பர்கள் டேசன் ஜினோ மற்றும் தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். காசி மீதான கந்து வட்டி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் கந்து வட்டி வழக்கில் உரிய விசாரணை நடத்தாததால் சம்பந்தப்பட்ட போலீசாரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர். அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் என சுமார் 7 பேரிடம் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கந்துவட்டி வழக்கில் வங்கி கடனில் இருந்த மோட்டார் சைக்கிள் ஆவணங்கள் கடன் செலுத்தி முடிவதற்குள் எப்படி காசி பெயருக்கு மாற்றப்பட்டது என்பது மர்மமாக உள்ளது. வங்கி அதிகாரிகள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் உதவி இன்றி ஆவணங்களை மாற்றியிருக்க முடியாது என்பதால் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர் மற்றும் அதிகாரிகளிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பலவேறு தடயங்களை அழித்ததாகக் கூறி காசியின் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |