போலி கொரோனா தடுப்பூசி தயாரித்து விற்றதாக வடக்கு மெக்சிகோவில் 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர் .
வடக்கு மெக்சிகோவில் நியூவோ லியோன் என்ற பகுதியில் போலி கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை 6 பேர் கொண்ட கும்பல் தயாரித்து விற்பனை செய்துள்ளனர் .தகவலறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை கைது செய்துள்ளனர் .அமெரிக்க நிறுவனமான ஃபைசர் பெயரில் லேபிள் ஒட்டப்பட்டு இந்த போலி தடுப்பூசியை விற்பதாகவும் இதன் ஒரு டோஸ் 2,000 டொலருக்கு விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது .கொரோனா பரவிக் கொண்டிருக்கும் நிலையில் மெக்சிகோவில் சில கிரிமினல் கும்பல்கள் மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் உள்ளிட்டவை திருடி அதோடு இந்த மாதிரியான போலி மருந்துகளை தயாரித்து விற்பனை செய்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர் .
இந்தப் போலி தடுப்பூசி எங்கெல்லாம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.மேலும் அதில் என்ன மருந்து உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்ற விபரம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 1075 பேர் கொரோனாவால் மெக்சிகோவில் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 1,77,061 ஆக உயர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது. மெக்சிகோவில் தற்போது ஒரு மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது .ஆனால் அந்நாட்டின் 7,50,000 முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு முழுமையான தடுப்பூசிகள் இன்னும் போடப்படவில்லை என்று கூறப்படுகிறது.