Categories
கல்வி மாநில செய்திகள்

காதலிக்கிறார்களா…? ”கண்காணியுங்க” பள்ளிக்கல்வித்துறை பரபரப்பு சுற்றைக்கை ….!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பரபரப்பு சுற்றிக்கை அனுப்பியுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறை மிகப் பரபரப்பான சுற்றறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் என்னவென்றால் அதாவது  பள்ளி , கல்லூரிகளில் இந்து மாணவர் , இளைஞர் முன்னணி மாணவர்களை ஒருங்கிணைப்பதாக தெரிவித்துள்ளது.பள்ளிகளை பொறுத்தவரை இந்து மாணவர், கல்லூரிகளை பொருத்தவரை இந்து இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் பள்ளியில் மதரீதியான செயல்பாடுகளில் ஈடுபடுவதாகவும் , இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாகவும் முதன்மைச் செயலாளர் பள்ளிக் கல்வித் துறையின் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.

Image result for ஹிந்து மத மாணவர்கள்

சட்டம் ஒழுங்கு முதன்மைச் செயலாளரின் இந்த பரிந்துரையின் அடிப்படையில் தற்போது பள்ளி கல்வித்துறையின் செயலாளர் வெங்கடேசன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள அந்த சுற்றிக்கையில் , பள்ளி கல்லூரிகளில் இந்து அமைப்புகளைச் சார்ந்தவர்கள் , மாணவர்கள் குழுவாக ஒன்றிணைந்து இந்து சித்தாந்தம் , இந்துமத தலைவர்களைப் பற்றிய விவரங்களை சொல்லி கொடுப்பதாகவும் , இந்து சாஸ்திரங்கள் கூறுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

Image result for மதம் மாற்றி காதல்

 

மேலும் கல்லூரிகளை பொருத்தவரை பிற மதத்தைச் சார்ந்த மாணவர்கள் இந்து மாணவிகளை காதலிக்கிறார்களா ? என்பதை கண்டறியவும் இந்து அமைப்பு மாணவ குழுக்கள் செயல்படுவதாக அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற நடவடிக்கை பள்ளி கல்லூரிகளில் செயல்படுகிறதா என்பதை கண்காணித்து அதை முற்றிலும் தடுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Categories

Tech |