பிரித்தானிய இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததையடுத்து தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஜெர்மனிக்கு எதிரான இங்கிலாந்தின் கால்பந்தாட்ட போட்டியை காண வெம்ப்லி மைதானத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கேட் மிடில்டன் சென்றுள்ளார். இதையடுத்து அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை, இருப்பினும் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என்ற அச்சத்தில் கேட் மிடில்டன் தன்னைத்தானே தனிமைபடுத்தி கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் NHS செயலியை பிரித்தானியர்கள் அனைவரும் பயன்பாட்டில் வைத்திருக்கின்றனர்.
அந்த NHS செயலியானது கொரோனா தொற்று பாதிப்பு உடையவரை நாம் தெரியாமல் நெருங்கினால் நமக்கு எச்சரிக்கை காட்டும். ஆனால் கேட் மிடில்டன் NHS செயலி எச்சரிக்கையை தற்போது பயன்படுத்த தவறிவிட்டாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதன் காரணமாக NHS-ன் 75-ஆம் ஆண்டு விழாவுக்கு இளவரசர் வில்லியம் தனியாக செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.