காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிரஞ்சனா தேவி என்ற மகள் உள்ளார். இந்தப் பெண் அதே பகுதியில் வசிக்கும் மாரியப்பன் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் காதலர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர்.
இதனையடுத்து காதல் ஜோடிகள் சமயபுரம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் இருவரின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன் பிறகு காவல் நிலையம் வந்த மணமகனின் பெற்றோரிடம் காவல்துறையினர் எழுதி வாங்கிக்கொண்டு புதுமண தம்பதியினரை அவர்களோடு அனுப்பி வைத்துள்ளனர்.