Categories
கவிதைகள் பல்சுவை

உலகில் மனம் பேசும் மொழி காதல்… மனம் என்னும் அருவியில் நீராய் கவிதைகள்..!!

உலகில் மனம் பேசும் மொழி காதல்… அனைவரிடமும் மௌன கதைகளாய் சுற்றி திரியும்.

மனதில் அன்பு இருந்தாலே போதும், எதுவும் சாத்தியமே..!

கடினமான இதயம் கூட கரையும், அன்பை மழையாய் பொழியும் போது..

நீ ஒருவரை அன்பு கொண்டு நேசிப்பது அழகானது..!

ஆனால் உன்னை ஒருவர் உரிமையோடு நேசிப்பது,மிகவும் ஆழமானது..

சிறகுகள் இல்லை என்னிடம் உன்னை தேடிவர

ஆனால் இதயம் இருக்கிறது..என்றும் உன்னை நினைத்திட

உயிரானவளே! உன்னை சந்தித்ததிலிருந்து

தனிமையை இழந்தேன், இனிமையாய் வாழ்ந்தேன்

என் இதயத்தில் காதலே…

சுவாசமாய் இருந்தது..ஆயிரம் ஆசைகள்!

அத்தனையும் நிறைவேற்ற ஆயிரம் ஆயுள் வேண்டும்…

உன்னோடு மட்டும்..!!

நீ எனக்காக ஆசைப்படுவதால் என்னவோ.?

என் ஆசைகள் கூட உனக்கானதாக மாறிவிடுகிறது..

கண்களை கொள்ளை கொண்டவளே.. நீ

என் காதலை கடந்து, கருவறையில் பிறந்து

கல்லறை வரை என்னுடன் வருவாயா..?

கண் விழிகளால் என்னை மயக்கி, காதல் வலையில் சிக்க வைத்து,

கொஞ்சம் கொஞ்சமாக என்னுயிரை குடிக்கிறாய்,

இங்கு உடல் மட்டும் தான் என்னிடம், உயிர் உன்னிடம் மட்டுமே..!!

Categories

Tech |