Categories
கவிதைகள் பல்சுவை

காதல் கொன்டேன் என்மீது…உன் உயிரில் உனக்காகவும்..!!

எனக்காக நீ கலங்கும் கண்ணீர்களின் வலிகள் வேதனைகள் அனைத்திற்கும் முடிவாக என் காதலை உனக்காகாவே அர்ப்பணிக்கிறேன்.

அழகே உன்னை நான் பூக்களுடன் மதிப்பிட மாட்டேன் ஏனெனில் பூக்களின் அழகு கூட வாடும் வரை தானே உன் மீது நான் வைத்திருக்கும் நேசம் இந்த ஆயுள் காலம் முழுவதும் அழகாய் நிலைத்து நிற்கும்.

உனக்காக நான் தீட்டும் இந்த காதல் கவிதைகள் அனைத்திற்கும் உயிர் இருந்தால் யாவும் கூறும் ஒரே வார்த்தை உன் பெயர் தானே என் அன்பே…!

நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் என அனைத்துமே கடந்து போனாலும் மாற்றங்கள் பல என் வாழ்க்கையை மாற்றி பார்த்தாலும் என்றும் மாறாது என் அடிமனதில் உன் நினைவுகளும் ஆழ்மனதில் உள்ள உனக்கான காதலும் மறவாமல்  நிலைத்து நிற்கிறதே…!

உன் செல்ல குறும்பிலும் இனிய சிணுங்கல்களிலும் நிலை மாறாத அன்பிலும் என் மீது வைத்திருக்கும் அக்கறையிலும் மறந்து இருக்கிறேன்  எக்கணமும் நம் காதலுடன்.

நடைபாதைகளில் நடக்க தெரியும் தான் எனக்கு ஆனாலும் உன் கை விரல் பிடித்து நடக்கும் போது நடைபழகும் குழந்தை போல தான் நான் உனக்கு.

என் கை விரலில் உள்ள பேனாமுனை கூட கதை எழுத சொன்னால் அதை செய்யாமல் மாறாக உன்னை பற்றியே கவி எழுத ஆசைப்படுகிறதே…!

வாழ்க்கையே இன்று தான் தொடங்குவது போல அந்த ஒரு நிமிட உனது காதலின் ஆசைகளை என்னிடம் வெளிப்படுத்திய போது உணர்ந்து வியந்து போனேன்…

யாரென்று தெரிந்து அந்தஸ்து அறிந்து கண்டிப்பாக காதல் வாழ்க்கையில் வருவது கிடையாது. எதையும் எதிர்பார்க்காமல் எப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் நிலை தளராது நிலைத்து நின்று ஜெய்க்குமே இந்த உண்மை காதல்.

உண்மையான காதல் என்பது அன்பு நிறைந்தது கஷ்டங்கள் கடந்தது நிலை மாறும் தன்மை இல்லாதது மனத்தால் ஒன்றுபட்டது பார்வைகளின் பாஷைகள் தெரிந்தது மொத்தத்தில் நாடி அடங்கும் வரை இருவரின் உயிரிலே நீங்காது ஊடுருவி ஓருயிராய் வாழ்வது…

பிடிவாதம் என்பது காதலுக்கே உரித்தான குணமே. எவ்வளவு தடைகளை பார்த்தாலும் நேசித்த இதயம் என்றுமே அனைத்தையும் கடந்து காதலை நிஜமாய் ஜெயிக்குமே.

உலகின் சிறந்த அதிஷ்டசாலிகள் ஒரு பெண்ணின் எண்ணிலடங்கா அன்பிற்கு உரியவனும் ஒரு ஆண் காட்டும் மொத்த பாசத்தின் சொந்தக்காரியாக திகழ்பவளும்.

பார்த்தவுடன் ரசித்து விட்டு மறந்து போக ஓவியம் அல்ல நீ. என் வாழ்க்கையில் காதல் என்பதன் முது அர்த்தத்தை நொடிப்பொழுதில் என்னவென்று அறிய வைத்த அழகான காவியம் தான் நீ.

Categories

Tech |