Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அவன் இதை பார்க்கணும்… வீடியோ காலில் நடந்தது என்ன…? இளம் பெண் எடுத்த விபரீத முடிவு…!!

காதல் தகராறில் காதலனுடன் வீடியோ கால் பேசியவாறு காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் அந்தோணி ஜெஸ்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரிய சுசிலா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு பிராட்வின் நிபியா என்ற மகளும் எக்சன் ஜெதீஸ் தேவ் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் அந்தோணி ஜெஸ்டின் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் பிராட்வின் நிபியா நெல்லை மாவட்டத்திலுள்ள ஏர்வாடி மருத்துவமனையில் நர்சிங் பயிற்சியாளராக வேலைபார்த்து வந்திருக்கிறார்.  இந்நிலையில் நிபியாவுக்கு வாலிபர் ஒருவருடன் காதல் ஏற்பட்டு மணிக்கணக்காக பேசி வந்துள்ளார். இதனையறிந்து உறவினர்கள் நிபியாவை கண்டித்துள்ளனர்.

இதையடுத்து காதலர் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதால், நிபியா கடந்த சில நாட்களாக தற்கொலை செய்து கொள்வதைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்துள்ளார். இந்நிலையில் நிபியா வீட்டில் இருந்தபோது தன்னுடைய காதலனை வீடியோ கால் மூலமாக தொடர்பு கொண்டுள்ளார். அப்போது தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதை தன்னுடைய காதலன் நேரில் பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காதலன் தன் நண்பர்களை தொடர்பு கொண்டு நிபியாவை காப்பாற்றுவதற்கான முயற்சியை எடுக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து நண்பர்கள் நிபியாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த நிபியாவின் பாட்டி  சம்பவ இடத்திற்கு பதற்றத்துடன் சென்றபோது, அவரது வீடு பூட்டி இருந்துள்ளது. இதனால் பாட்டி ஜன்னல் வழியாக பார்த்தபோது நிபியா தூக்கிட்டு சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிபியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் காதல் பிரச்சனையால் காதலனுடன் வீடியோ கால் பேசியவாறு நிபியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. மேலும் காதலன் பேசவில்லை என்று நிபியா தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை வேறு எதுவும் காரணம் இருக்கின்றதா என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |