வீட்டில் இருந்து வெளியேறிய காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி பகுதியில் 17 வயது சிறுமி கடந்த 15-ஆம் தேதி திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமிக்கும் ஒட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன் என்பவருக்கும் இடையில் காதல் இருந்து வந்தது தெரியவந்தது. இதனால் அவர்கள் 2 பேரும் ஊரைவிட்டு வெளியேறி திருமணம் செய்ததாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் காதல் ஜோடியை, காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து இருந்தனர்.
அதன்படி காதல் ஜோடியும் மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றனர். அப்போது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் விஷத்தன்மை வாய்ந்த அரளி விதையைத் தின்று விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் அவர்கள் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.