Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பெற்றோர் எதிர்ப்பு…. காதலனை பார்க்க வந்த பெண்…. பின் நடந்த சம்பவம்….!!

பெங்களூரில் இருந்து வந்த பெண் தன் காதலனுடன் திருமணம் செய்துகொண்டு காவல் நிலையத்தில் பாதுகாப்புகேட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னான்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியில் அரவிந்தன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் ஸ்டிக்கர் கடை ஒன்று நடத்தி வருகின்றார். இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த சங்கரின் மகள் சந்தியா அன்னான்பட்டியில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது அரவிந்தன், சந்தியா இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு காதல் ஏற்பட்டது. இவர்களின் காதலுக்கு சந்தியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால்  கடந்த 7-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய சந்தியா அன்னான்பட்டிக்கு வந்து காதலனை சந்தித்துள்ளார்.

இதனையடுத்து காதல் ஜோடிகள் இருவரும் ஒரு முருகன் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு திருமணம் முடிந்த ஜோடி இருவரும் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டுள்ளனர். இதனால் காவல்துறையினர் இருதரப்பினரின் பெற்றோரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதில் சந்தியா தனது காதல் கணவருடன் செல்வதாக தெரிவித்துள்ளார். ஆகவே இருவரும் மேஜர் என்பதனால் காவல்துறையினர் எழுதி வாங்கிக்கொண்டு சந்தியாவை அரவிந்தனுடன் அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |