Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காதலர் தினத்திற்காக காத்திருக்கும் ரோஜாக்கள்..!!

கிரிஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில் சீரான சீதோச இதோ சில நிலை நிலவுவதால் திறந்த வெளியிலும் பசுமை குடில்களில், பல்லாயிரம் ஹெக்டேக்கர்களின் ரோஜா விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் ஆயிரக்கணக்கானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.ஓசூர் ரோஜா மலருக்கு சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதால் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புனித வெள்ளி,காதலர்  தினங்களில் அதிக அளவிலான மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கடந்த ஆண்டு காதலர் தினத்திற்காக சீனாவில் இருந்து அதிக அளவில் பிளாஸ்டிக் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக, சீன பூக்களின் ஏற்றுமதி குறைந்து, இந்திய மலர்களின் ஏற்றுமதி அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இந்தாண்டு ஓசூரிலிருந்து காதலர் தினத்திற்காக வெளிநாடுகளுக்கு 2 கோடி  மலர்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறும் விவசாயிகள் , தற்போது வரை உள்ளூர் சந்தையில் ஒரு ரோஜா மலர் 10 ரூபாய்க்கும் ஏற்றுமதி 15 ரூபாயும் ஆக இருந்து வருவதாக கூறுகின்றனர்.

காதலர் தினத்திற்கு இன்னும் 15 நாட்கள் உள்ளதால், ரோஜா மலரின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள்  கூறுகின்றனர்.

தமிழக அரசு அண்மையில் 21 கோடி ரூபாயில், சர்வதேச மலர் இல்ல மையம்ஓசூரில்  அமைக்கப்படும் என தெரிவித்துள்ளதற்கு, விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அந்த பணிகளை விரைவாக முன்னெடுக்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

Categories

Tech |