Categories
மாநில செய்திகள்

காதலர் தினத்திற்காக காத்திருக்கும் தமிழக ரோஜாக்கள்..!!

காதலர் தினம் நெருங்குவதை அடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீன நாட்டு மலர்களை வாங்குவதற்கு வெளிநாடுகள் தயக்கம் காட்டுவதால் ஓசூர் ரோஜா மலர் தேவை அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் வரும் 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ரோஜா பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

சீனாவில் வைரஸ் தொற்று காரணமாக அங்கு உற்பத்தி செய்யப்படும் ரோஜா மலர்கள் வாங்குவதில் வெளி நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதனை அடுத்து இந்தியாவில் தமிழகத்தின் ஓசூரிலிருந்து சாகுபடி செய்யப்படும் ரோஜாமலர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஓசூர் சுற்றுவட்டாரத்தில் பசுமை குடில்கள் அமைக்கப்பட்டு தாஜ்மஹால், கிராண்ட் காலா, நோ பிளஸ், 30க்கும்  மேற்பட்ட பல வகை ரோஜா மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

ஓசூரில் இருந்து ரோஜா மலர்கள் பேக்கிங் செய்யப்பட்டு பெங்களூர், சென்னை வழியாக விமானங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.

Categories

Tech |