காதலில் விழும் முன் சற்றும் சிந்திக்காமல் எடுக்கும் முடிவு பிரிவிற்கு காரணம் ஆகின்றது.
காதலிக்கும் பல ஜோடிகள் திருமணம் ஆகாமலேயே பிரிவதற்குக் காரணம், அவர்களில் யாரை குறை சொல்வது என்று தெரியவில்லை. காதலர்கள் முதலில் எதை பற்றியும் சற்றும்கூட சிந்திக்காமல் காதலிப்பது தான். பின்னர் தங்களது நிலைகளை உணர்ந்தபின் இந்த காதல் நமக்கு சரிப்பட்டு வரத்து என்று பிரிந்து விடுகிறார்கள். இது ஒரு வகையில் ஆரோக்கியமான மனநிலை என்று கூற வேண்டும்.
பொருந்தாத காதல் அல்லது ஆர்வமில்லாத துணையுடன் காதலித்து விட்டோமே என்ற ஒரே காரணத்திற்காக சேர்ந்து வாழாமல் விலகிப் போவது மனிதனுக்கே உரிய தந்திரம் நிறைந்த புத்திசாலி தனம். காதலுக்கு முக்கிய எதிரிகளாக திடீர் பிரிவு, திடீர் திருமணம், பண நெருக்கடி, உறவுகளின் நெருக்கடிகள் என வாழ்வில் எதிர்த்து நிற்கின்றது. இவை அனைத்தையும் தாண்டி காதலுடன் வாழ்வதும், காதலை தொடர்வதும் மனம் சாதிக்கும் திறமை தான்.
கண்டதும் காதல், காணாமல் காதல் என்று இல்லாமல், ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்து கொண்டு, புரிந்து கொண்டு நமது நிலைமை என்னவென்பதை உணர்ந்து பிறகு நமது காதல் சரிதானா என்பதை உறுதி செய்த பின்னரே காதலை ஏற்கவோ, கூறவோ வேண்டும். அதை விடுத்து நம் மனதில் தோன்றிய காதலை எந்த அலசலும் இல்லாமல், காதலிப்பவரிடம் கூறி அவரது மனதிலும் அந்த எண்ணத்தை உருவாக்கிவிட்டு பின்னர், தனது நிலைக்காக வருந்தி காதலில் இருந்து பின் வாங்குவது என்பது மிக பெரிய கோழை தனம்.
இதனால் நமது மன நிலை மட்டும் அல்லாமல் அடுத்தவரது மனதையும் உயிர் வாழும்போதேகொன்று விடுகிறோம். மேலும் பொய்யாக காதலிப்பது போன்று நடிப்பவர்களை நம்பி ஏமாறுவது, காதலிப்பது போன்ற எண்ணத்தில் ஊர் சுற்றிவிட்டு, பாக்கெட்டை காலியாக்கி விட்டு கைவிரிப்பது, தன்னைப் பற்றிய விஷயத்தை மறைத்து, காதலிக்கும் வரை போலியாக நடிப்பது போன்ற விஷயங்கள்அனைத்தும் நான் கூறும் விஷியங்களில் இல்லை.
பெண்கள் எப்பொழுதுமே அழங்காரப் பிரியா்கள் ஆவார்கள். அலங்காரம் செய்து கொள்வதில் பெண்கள் அதிக நேரம் ஒதுக்குவார்கள் என்பதும் உண்மைதான். தான் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா பெண்களிடமும் இருக்கும். இதில் இரண்டு வகையான பெண்கள் இருக்கிறார்கள். தான் போட்டிருக்கும் அலங்காரம் வெளியே தெரியாதது போல் அழகு படுத்தி கொள்வார்கள்.
இன்னொரு ரகம் எப்பொழுதும் பளிச்சென்று அழகாக இருப்பதற்கு அழகு படுத்தி கொள்வார்கள். இதில் பளிச் ரகத்தினர் மிக எளிதாக ஆண்களுடன் பழகுபவர்களாக இருப்பார்கள். மிகவும் மென்மையாக அழகுப்படுத்திக் கொள்பவர்கள் ஆண்களிடம் பழகுவதற்கு தயங்குபவர்களாக இருப்பார்கள். இதில் முதல் ரகப் பெண்களிடம் ஆண்கள் உரிமையுடனும், சகஜமாகவும் பேசுவார்கள், பழகுவார்கள்.
ஆனால் தனக்குப் பிடித்த பெண் என்று வரும் பொழுது கண்டிப்பாக மென்மையாக அழகுப்படுத்திக் கொள்பவளைத் தான் தேர்ந்தெடுப்பார்கள். அதிகமாக அழகுப்படுத்திக் கொள்ளும் பெண், சுதந்திர விரும்பியாகவும், மிகத் தைரியமானவளாகவும், போராடத் தயங்காதவளாகவும் இருப்பார்கள்.