தன்னைவிட முப்பத்தி ஒரு வயது அதிகமான வரை பணத்திற்காக காதலித்த இளம்பெண்ணின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அலைசா ரேநீ கியூடிர்ரெஸ்(22 வயது) என்பவர் லாஸ்வேகஸ்-ஐ சேர்ந்தவர். இவர் 53 வயது கோடிஸ்வரர் ஒருவரை தனது காதலராக ஏற்று கொண்டு சொகுசான வாழ்க்கையை நடத்தி வருகிறார். அவரின் பிரம்மாண்டமான ஹோட்டல்கள், கார்கள் மற்றும் பிற பகட்டான சொத்துக்களை அனுபவித்து அவருடன் வசித்து வருகிறார். அலைசா இவர்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வெளியிடுவதே அவருக்கு பிரச்சனையாக வந்துள்ளது.
தன்னைவிட அதிக வயது கொண்ட நபரை சொத்துக்காக அலிசா பயன்படுத்துவதாக கடுமையான விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப தன்னுடைய பதிவுகளில் அலைசா தனது காதலரின் வயது மற்றும் தன் வயது ஒப்பிட்டுக் கூறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அவர் கூறுகையில் நாங்கள் இருவரும் இரண்டு வருடங்களாக காதலித்து வருகிறோம். காதல்ர்களுக்கு வயது தடையில்லை. என்னை மகாராணி போல கவனித்துக்கொள்கிறார் அவரும் நானும் தீவிரமாக காதலித்து வருகிறோம். எனவே அவரின் செல்வத்தை நான் அனுபவிப்பதில் தவறுகள் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார்.