அஜித்தின் ரீல் மகளான அணிகா கதாநாயகியாக நடிப்பதற்கு தயாரானதாக தகவல் வெளியாகி அவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மலையாள மொழியில் மிகவும் புகழ்பெற்ற குழந்தை நட்சத்திர நடிகை அனிகா சுரேந்திரன் அவர்கள், மலையாளத்தில் தனது 3 வயதில் “சோட்டா மும்பை” என்கிற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானர். அதனைத்தொடர்ந்து பல்வேறு படங்களிலும் குழந்தை கதாபாத்திரமாக நடித்துள்ளார். மேலும் தமிழில் நடிகர் அஜித்திற்கு மகளாக விசுவாசம், என்னை அறிந்தால், போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமன்றி மிருதன், பாஸ் என்கிற பாஸ்கரன், நானும் ரவுடிதான், போன்ற படங்களிலும் தொடர்ந்து நடித்திருக்கிறார். இந்நிலையில் 15 வயது ஆகியுள்ள அனிகாவிற்கு ஹீரோயின் கதாபாத்திரம் கிடைக்கப் பெற உள்ளது.
ஹீரோயினியாக நடிக்க தயாராக உள்ள அணிகா அவருடைய தோற்றங்களை பல்வேறு விதங்களில் போட்டோ ஷூட் செய்து வெளியிட்டுள்ளார். அத்தகைய போஸ்டருக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது மலையாள படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான பேச்சுவார்த்தையானது நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் காதல் கதையை மையக் கருத்தாக கொண்டு பல்வேறான புதுமுகங்கள் நடிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து தமிழ் படங்களில் வாய்ப்பை தேடிக் கொண்டிருக்கிறார் குழந்தை நட்சத்திர நடிகை அனிகா அவர்கள்.