லண்டனில் மர்ம நபர் ஒருவர் திடீரென ரயில் நிலையத்தின் வெளியே ஒருவரை கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் West India Quay DLR என்னும் ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த ரயில்வே நிலையத்தின் வெளியே மர்ம நபர் ஒருவர் கத்தியை கொண்டு தனிநபரொருவரை பயங்கரமாக தாக்கியுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கத்தியால் தாக்கப்பட்ட நபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக ஆம்புலன்சில் அனுப்பி வைத்துள்ளார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக இங்கிலாந்து போக்குவரத்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, மர்ம நபரால் ரயில்வே நிலையத்தில் முன்பு கத்தியால் குத்தப்பட்டு கிடந்த நபருக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றும், இச்சம்பவம் நடைபெற்ற ரயில்வே நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.