Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கத்திமுனையில் மிரட்டி ….செல்போன் பறித்த 3 வாலிபர்கள் ….கைது செய்த போலீசார் …!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் கத்திமுனையில்  மிரட்டி செல்போன் பறித்த  3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம்  கும்மிடிப்பூண்டியை  அடுத்த  பரணம்பேடு கிராமத்தை சேர்ந்த 36 வயதான சந்திரன் என்பவர் கூலி தொழில் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இவர் குருவாட்சேரி பகுதியில்  வேலை முடித்துவிட்டு தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது  ஏனாதிமேல்பாக்கம் அருகே சென்று கொண்டிருக்கும்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் தொழிலாளி சந்திரனை கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்த  செல்போனை பறித்து சென்றனர். இது தொடர்பாக சந்திரன் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 17 வயது சிறுவர்கள் 2  பேர் மற்றும் பொன்னேரியை  சேர்ந்த விஜயன் (வயது 22) ஆகிய 3 பேரை  கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் வெள்ளவேடு  பகுதிக்கு அருகே உள்ள படூர் பகுதியில்  தனியார் தொழிற்சாலையில் கன்னடபாளையம்  பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் நிறுவனத்தில் பணி செய்து கொண்டிருக்கும் போது, அங்கு வந்த 2  வாலிபர்கள்  குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம்        இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயற்சித்தனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அந்த இருவரையும் பிடிக்க விரட்டிச் சென்றனர். இந்த வாலிபர்களில் ஒருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். இது சம்பந்தமாக  படூர் காலனி பஜனை கோவில் தெருவை சேர்ந்த விஜய் (வயது 21) என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

Categories

Tech |