Categories
சினிமா

அப்படிப்போடு….! “காத்துவாக்குல ரெண்டு காதல்”…. அடுத்த பாடல் இன்று ரிலீஸ்….. குஷியில் ரசிகர்கள்….!!!

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு பாடல் இன்று வெளியாகவுள்ளதாக விக்னேஷ் சிவன் கூறியிருக்கிறார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்திருக்கும், “காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல், கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி, காதலர் தினத்தன்று வெளியானது.

இதனையடுத்து, இரண்டாவது பாடல், விக்னேஷ் சிவனின் பிறந்தநாளான கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதியன்று வெளியானது. இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை  பெற்றது. இந்நிலையில் இத்திரைப்படத்தின், “நான் பிழை” என்னும் அடுத்த பாடல் இன்று வெளியாகும் என்று விக்னேஸ் சிவன் கூறியிருக்கிறார்.

Categories

Tech |