கொடைக்கானலில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களில், விலைப்பட்டியலை கட்டாயம் வைக்கவேண்டும் என்று கோட்டாட்சியர் ஆணையிட்டுள்ளார். ஏனென்றால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் கொள்ளை நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த புகாரின் பேரில் கொடைக்கானலில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களில் விலைப்பட்டியலை கட்டாயம் வைக்கவேண்டும். மேலும், தங்கும் விடுதியில் காலை 10 மணிக்கு செக் அவுட் முறை என்பது விதிகளுக்கு புறம்பானது என்று, கோட்டாட்சியர் தெரிவித்திருக்கிறார்.
Categories