லண்டனில் மர்ம நபர் இளைஞன் ஒருவனை சாலையில் ஓட ஓட துரத்தி கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் Gravesend டிலிருக்கும் சாலையில் மர்ம நபர் ஒருவர் இளைஞனை கத்தியால் குத்துவதற்கு துரத்தியுள்ளார். இதனையடுத்து மர்மநபரிடமிருந்து தன்னுடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக இளைஞன் சாலையில் ஓடியுள்ளார். இருப்பினும் மர்மநபர் இளைஞனை விடாது ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தியுள்ளார். அவ்வாறு இளைஞனை மர்ம நபர் கத்தியால் தாக்கும்போது, அங்கு கார் மற்றும் ஒரு பெண் குழந்தையுடன் வந்துள்ளார்கள்.
இவர்களைக் கண்ட மர்மநபர் கத்தியால் வாலிபரை தாக்குவதை விட்டுட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்து கிடந்த இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இளைஞரை ஓட ஓட துரத்தி கத்தியால் குத்திய மர்ம நபர் பற்றிய தகவல் ஏதேனும் தெரிந்திருந்தால் காவல்துறையினருக்கு தெரிவிக்கும்படி கூறியுள்ளார்.